மாரவில பிரதேசத்திலும் 25 பேர் கைது!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாகக் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்வதற்குத் தயாராக இருந்த 25 பேர் மாரவில பிரதேசத்தில் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கடற்படையின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்,

“இலங்கை கடற்படை, இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று மாரவில பிரதேசத்தில் நாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடல் மார்க்கமாகச் செல்வதற்குத் தயாராக இருந்தனர் எனச் சந்தேகிக்கப்படும் 9 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 10 சிறுவர்கள் உட்பட 25 பேரைக் கைதுசெய்துள்ளனர். இவர்கள் 25 பேரும் ஒரே வீட்டில் தங்கியிருந்த வேளை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இவர்கள் மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் ஹலவத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

25 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக மாரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.