ரஷ்யாவுக்கு வர வேண்டாம் : இலங்கைப் பிரதிநிதிகளிடம் தெரிவித்த ரஷ்யா!

ரஷ்யாவில் இருந்து எரிபொருள் மற்றும் உரங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கையிலிருந்து பிரதிநிதிகள் குழுவொன்று இந்த வார இறுதியில் ரஷ்யா செல்லவிருந்த போதிலும் குறித்த பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யா செல்லவிருந்த தூதுக்குழுவில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க ஆகியோர் அடங்குவர்.

முன்னதாக அறிவித்தபடி இந்த வாரம் விஜயம் நடைபெறாது என்று கூறப்படுகிறது.

தூதுக்குழுவின் வரவேற்பை ரஷ்யா ஒத்திவைத்துள்ளது.

கடந்த வார இறுதியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாட இரண்டு அமைச்சர்கள் விரைவில் செல்லவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.