புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பிரதேசத்தில் இரண்டு வாகனங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்ற குற்றச்சாட்டில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கொடுத்த தகவலுக்கமைய இரண்டு வாகனங்களுடன் அதில் இருந்த 10 பேரையும் முள்ளியவளைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தென் பகுதியைச் சேர்ந்தவர்களே நேற்றிரவு இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ஸ்கானர் இயந்திரம் ஒன்று மற்றும் பூஜை வழிபாட்டுக்குரிய பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

புதையல் தோண்ட வந்த சந்தேகத்தின் பேரில் கைதான இவர்களிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இவர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் எங்கு வந்தார்கள்?, யாருடன் தொடர்பில் இருந்தார்கள்?, எங்கெங்கு சென்றார்கள்?, எங்கு புதையல் தோண்ட வந்தனர்? – என்ற பல்வேறு கோணங்களில் மேலதிக விசாரணையினையில் முள்ளியவளைப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.