நாளை அல்லது நாளை மறுநாள் குண்டு கதை உளவுத்துறையால் உறுதி செய்யாத தகவல் – பாதுகாப்பு அமைச்சகம்

நாளை (05) அல்லது நாளை மறுதினம் (06) இடம்பெற இருந்ததாகக் கூறப்படும் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு செயலாளருடன் தொடர்பு கொண்டு பொலிஸ் மா அதிபர் சமர்ப்பித்த கடிதம், அவை உறுதிப்படுத்தப்படாத புலனாய்வுத் தகவல் என பாதுகாப்பு அமைச்சு தற்போது அறிவித்துள்ளது.

கறுப்பு ஜூலையை முன்னிலைப்படுத்தி இம்மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் மூலம் கிடைத்த உறுதிப்படுத்தப்படாத உளவுத் தகவல் என பாதுகாப்பு அமைச்சு விசேட செய்திக்குறிப்பொன்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், செய்தியில் குறிப்பிட்டுள்ளபடி, கறுப்பு ஜூலையை முன்னிலைப்படுத்தும் பயங்கரவாத தாக்குதல் சாத்தியம் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த புலனாய்வுத் தகவல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.