சட்டவிரோத குடியேற்ற முயற்சியில் ஈடுபட்ட 31 பேரை லெபனான் கைது செய்தது.

லெபனான் அரச பாதுகாப்பு, நேற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 31 பேரை சட்டவிரோத குடியேற்ற முயற்சியில் ஈடுபட்டதாக கூறி கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்படவில்லை. வடக்கு நகரமான கலாமூனில் இருந்து படகு மூலம் லெபனானில் இருந்து தப்பிக்க முயன்றனர்.

விசாரணை மற்றும் பிற சட்ட நடைமுறைகளுக்காக அவர்கள் நீதித்துறை அமைப்புகள் முன்பாக அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக லெபனானில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியினால் நூற்றுக்கணக்கான அகதிகள் நாட்டை விட்டு வெளியேற முயன்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 80-க்கும் மேற்பட்ட லெபனான் மற்றும் சிரியா நாட்டைச் சேர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு வடக்கு நகரமான திரிபோலிக்கு அருகில் மூழ்கியது. அவர்களில் 45 பேர் மட்டுமே மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.