நடிகர் அருண் விஜய் நடித்துள்ள ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் தொடரின் டீசர் வெளியாகி உள்ளது.

‘ஈரம்’, ‘குற்றம் 23’ ஆகிய படங்களை இயக்கியஇயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெப்தொடர் ‘தமிழ் ராக்கர்ஸ்’. இந்த தொடரில் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த வெப் தொடரை ஏவிஎம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சைபர் கிரைமின் இருண்ட பக்கத்தையும், பொழுதுபோக்குத் துறை அதனுடன் எவ்வாறு போராடுகிறது என்கிற உண்மையையும் மையமாக வைத்து இந்த வெப்தொடர் உருவாகியுள்ளது. ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் தொடர் குறித்து ஏவிஎம் புரொடக்‌சன்ஸ் தயாரிப்பாளர் அருணா குகன் கூறுகையில், “தமிழ் ராக்கர்ஸ் எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நெருக்கமான தொடராகும். ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் தொடர் மூலம் ஏவிஎம் புரொடக்‌ஷன் முதல் முறையாக ஓடிடி தளத்தில் கால்பதிக்கிறது.

அபர்ணாவும் நானும் சைபர் கிரைம், பைரஸி பொழுதுபோக்குத் துறையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்களுக்கு காட்டவும், அதை பற்றிய கதையை கூறுவதிலும் மிகவும் ஆர்வமாக இருந்தோம். திறமை மிகுந்த இயக்குனர் அறிவழகனுடன் பணிபுரிந்ததால், இக்கதையை ஆழமாகவும், அபார திறமையுடனும் காட்சிப்படுத்த முடிந்துள்ளது ” என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.