என்னை விமர்சித்த தம்மிக்கவிடமிருந்து அமைச்சுப் பதவியை உடனே பறிக்கவும்! கோட்டாவிடம் ரணில் வலியுறுத்து.

அமைச்சரவை மரபுகளை மீறி தன் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த தம்மிக்க பெரேராவை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இது தொடர்பான தனது நிலைப்பாட்டை பிரதமர், ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குத் தெரியப்படுத்தியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், உரிய திட்டம் இல்லை எனவும் , நிதி அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் எனவும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் பிரதமர் நேற்று வலியுறுத்தியுள்ளார் என்று அறியமுடிகின்றது.

Leave A Reply

Your email address will not be published.