மகிந்த என்னும் மங்கினி மன்னன் – ஈழத்து இளைஞர்களின் நக்கலான அசத்தலான பாடல்.

தலைநகரம் முழுவதுமாக ஆர்ப்பாட்டங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகக் கிளர்ந்த நிலையில் ஆர்ப்பாட்டமே இல்லாமல் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகி இணையத்தைக் கலக்கிக் கொண்டு இருக்கின்றது.

இலங்கை – அநுராதபுர இராஜ்யத்தின் இறுதி மன்னனும் இலங்கை வரலாற்றில் மிக மோசமாக வர்ணிக்கப்படும் மன்னருமாகிய ஐந்தாம் மகிந்தன் என்பவர் எவ்வாறு சோழரிடம் நாட்டையும் இராஜ்யத்தையும் தாரை வார்த்தார் என்பதை வில்லுப்பாட்டுடன் இணைத்துக் கூறுகின்றது இந்தப் பாடல்.

செவி வழி மூலமும் பாடப்புத்தகங்களிலும், ஒரு சில ஆராய்ச்சி முடிவுகளையும் வைத்து வரலாற்றில் புனையப்பட்ட உண்மைக்கதைகளை அடிப்படையாக்கி இப்பாடலின் கரு உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாடல் குழு பாடல் பற்றி குறிப்பிட்டு இருந்தாலும் தற்கால அரசியல் நிலமையுடன் பாடலை இணைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை.

பூவன் மீடியா மூலமும் புத்தி கெட்ட மனிதரெல்லாம் திரைப்படம் மூலமும் பிரபலமான இளைஞர்கள் இணைந்து இந்தப் பாடலைத் தயாரித்துள்ளனர்.

பாடலுக்கான இசை, வரிகள் மற்றும் எண்ணத்தை அமைத்து பாடியுள்ளார் இசையமைப்பாளர் பூவன் மதீசன்.

பாடலின் இணைப்பு:-

Leave A Reply

Your email address will not be published.