இலங்கையில் ஆட்சி ஒழுங்கை உடன் சீர்செய்க! – வெளிநாடுகள் வலியுறுத்து.

இலங்கையில் கூடிய விரைவில் ஆட்சி ஒழுங்கைச் சீர்செய்யுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையின் முன்னேற்றங்களைத் தொடர்ந்து அவதானித்து வருகின்றோம் என்று தெரிவித்துள்ளது. ஜனநாயக ரீதியானதும் அமைதியானதுமான ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைக்குமாறு சகல தரப்புகளையும் அது கேட்டிருக்கின்றது.

நாட்டில் அடுத்த சில நாட்கள் நீடிக்க இருக்கும் அதிகார வெற்றிட நிலைமை குறித்து இந்தியாவும் மேற்கு நாடுகளும் தீவிர கவனம் செலுத்தி வருவது தெரிகின்றது.

அதேவேளை, கொழும்பில் பெரும் மக்கள் கிளர்ச்சியை அடுத்து ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகுவதாகக் கூறி ஒதுங்கியிருக்கின்றனர். இதனால் அங்கு நிலவும் அதிகார வெற்றிடம் குறித்து இந்தியா மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.