பிரதமர் ராஜினாமா செய்ய முடியாது அரசியலமைப்பின் படி செயற்படுவார் – வஜிர.

அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் பதவி விலக முடியாது எனவும் அவர் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவார் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எரிக்கப்பட்ட பிரதமரின் வீட்டை இன்று (10) பார்வையிட வந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் பதவி விலகப் போவதாக ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டமைக்காக வருந்துவதாகவும் அரசியலமைப்பின் 37ஆவது சரத்தின் பிரகாரம் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அபேவர்தன தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.