சஜித் ஜனாதிபதி டலஸ் பிரதம மந்திரி அல்லது டலஸ் ஜனாதிபதி சஜித் பிரதம மந்திரி!

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகியதன் பின்னர் ஜனாதிபதியாக நியமிக்கப்படவுள்ளவர் மற்றும் சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்படவுள்ளவர் தொடர்பில் நேற்று பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, விமல்-கம்மன்பில மற்றும் ஏனைய குழுக்கள், அனுர யாப்பா மற்றும் பொதுஜன பெரமுனவில் இருந்து சுயேச்சையான ஏனைய குழுக்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு இடையில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

நேற்று பிற்பகல் நுகேகொட பிரதேசத்தில் உள்ள தலதா அத்துகோரளவின் வீட்டில் ஒரு கலந்துரையாடலும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் மற்றுமொரு கலந்துரையாடலும் இடம்பெற்றது.

பாராளுமன்றத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை நியமிக்க வேண்டும் என பல தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதன்படி ஜனாதிபதி பதவிக்கு ஐமச தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த இருவரில் ஒருவர் ஜனாதிபதியாகவும் மற்றையவர் பிரதமராகவும் சர்வகட்சி ஆட்சியில் அமர்த்தப்பட்டு பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சஜித் ஜனாதிபதியாகி டலஸ் பிரதமராக அல்லது டலஸ் ஜனாதிபதியாகி சஜித் பிரதமராக வர வாய்ப்புள்ளது.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதும் விசேட அம்சமாகும்.

Leave A Reply

Your email address will not be published.