வெளிநாட்டு இறக்குமதிகளை நிறுத்தி உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாக அறிவித்தமைக்கு வரவேற்பு

புதிய அரசாங்கம் வெளிநாட்டு இறக்குமதிகளை நிறுத்தி உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாக அறிவித்ததை வரவேற்பதாக யாழ் மாவட்ட கமக்காரர் அமைப்பு அதிகார சபையின் தலைவர் க.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.

தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள விவசாய நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.தியாகலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகள் பொருட்கள் சந்தைக்கு செல்லும் போது நியாயமான விலை கிடைப்பது இல்லை எனினும் இந்தபுதிய அரசாங்கம் உள்ளூர் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அறிவித்துள்ளது வெளிநாட்டு இறக்குமதியினை கூடுதலாக நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது இது வரவேற்கக்கூடிய ஒரு விடயம் இதனை செயற்படுத்த வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்

யாழ் மாவட்டத்தில் விவசாயிகள்இவ்வருடம் உருளைக் கிழங்கினை அதிக அளவில் பயிரிட வுள்ளார்கள் பெரும் போகத்தில் உருளைக்கிழங்கினை பயிரிட வுள்ளார்கள் 350 மெட்ரிக் தொன் விதை உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு கிடைக்குமாக இருந்தால் அதனை பயிரிட்டு அதன் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள்

இந்த அரசாங்கம் வெளிநாட்டு இறக்குமதி களை நிறுத்தி எமது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்குமேயானால் விவசாயிகள் நிலத்தினை பயன்படுத்தி எமது மக்களுக்கான உணவுப்பொருட்களை நியாய விலையில் பெற்றுக் கொடுப்பதற்கு முன்வருவார்கள். யாழ் மாவட்ட விவசாயிகளின் பொருளாதாரம்இந்த புதிய அரசாங்கத்தின் கையில்தான் உள்ளது

வடக்கு பிரதேசம் மீன்பிடி மற்றும் விவசாயத்திற்கு பெயர்போன பிரதேசம் அதிலும் படித்த இளைஞர்கள் கூட விவசாயத்தில் ஈடுபடுகின்றனர் அரசாங்கம் வெளிநாட்டு இறக்குமதி களை நிறுத்தினால் எமது விவசாயத்துறையில் மேலும் வளர்ச்சி ஏற்படும்

விவசாயிகள் கட்டாக்காலி நாட்களால் பெரும் பிரச்சினையினை எதிர்நோக்குகிறார்கள்
கட்டாக்காலி நாய்களினால் கால்நடைகளும் பாதிப்படைகின்றன அத்தோடு மனிதர்களுக்கும் பாதிப்புதான் குறிப்பாக ஒரு நாளில் 20 பேர்வரையில் இந்த நாய் கடிக்கு இலக்காகி பாதிப்படைகிறார்கள் இது மனிதர்களுக்கு மட்டுமல்ல எமது விவசாய கால்நடைகளும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது
இந்த கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த இந்த அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்

அத்தோடு இந்த முறை காலம் பிந்திய மழையினால் வெங்காய செய்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது இந்த வெங்காய அழிவிற்கு நிவாரணம் எந்த அரசாங்கமும் இதுவரை காலமும் எமக்கு வழங்கியதில்லை

எனவே இந்த புதிய அரசாங்கம் இந்த விவசாயகளின் பொருளாதாரத்தினை கருத்தில் கொண்டு இந்த வெங்காய அழிவுக்கு உரிய விவரங்கள் சேகரித்து அதற்குரிய அழிவுநிவாரணத்தை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்

அத்தோடு இந்த அரசாங்கம் 10 தொழில்களுக்கு இலவச காப்புறுதி திட்டத்தினை வழங்குவதாக அறிவித்துள்ளது அதேபோல் எமது வெங்காய செய்கையாளர்களுக்கும்இதேபோல் ஒரு காப்புறுதி திட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் மூலம் எமது வெங்காய செய்கையினை ஊக்குவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.