அலரி மாளிகையில் பொருட்கள் திருட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

அலரி மாளிகையின் ஊடகப் பிரிவில் இருந்த உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன என்று பிரதமர் ஊடகப் பிரிவு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

ஊடகப் பிரிவில் இருந்த இரண்டு மடிக்கணினிகள், வீடியோ கமரா மற்றும் ஏனைய கமரா உபகரணங்கள் இவ்வாறு திருடப்பட்டுள்ளன என்று பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 9ஆம் திகதி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அலரி மாளிகைக்குள் பிரவேசித்ததன் பின்னரே இவ்வாறு உபகரணங்கள் காணாமல்போயுள்ளன என்றும் பிரதமரின் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் அலரி மாளிகையில் வசிக்கவில்லை எனவும், பிரதமரின் ஊடகப் பிரிவின் ஒரு பகுதியை மாத்திரம் அங்குள்ள கட்டட வளாகத்துக்கு மாற்றியிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.