ஜனாதிபதி கோத்தாபாவை நாட்டை விட்டு வெளியேற இந்தியா உதவவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டை விட்டு தப்பிச் செல்ல இந்தியா உதவியது என்ற செய்தியை இந்திய அரசாங்கம் வன்மையாக மறுப்பதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்ஷ வெளியேறுவதற்கு இந்தியா வசதி செய்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர்.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் உள்ள மக்களை தற்போதைய சிரமங்களிலிருந்து விடுவித்து அவர்கள் விரும்பும் செழிப்பை அடைவதற்காக அவர்களுக்கு உதவிகளை வழங்க இந்தியா உறுதிபூண்டுள்ளது.

இதேவேளை, நேற்று மாலை ஜனாதிபதி உட்பட 17 பேருக்கு துபாய் செல்வதற்கு விமான நிலைய குடிவரவுத் திணைக்களத்தினால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தகவலை குடிவரவு அதிகாரிகள் சங்கம் மறுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.