நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு ஆப்பு வைத்த Netflix !

தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான ஜோடிகளாக திகழ்ந்து வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்கள் காதலுக்கு பின் இருவரும் கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

மிகவும் அடம்பரமாக நடந்த இவர்களின் திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக் கான், சூர்யா, கார்த்தி என பல முக்கிய நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே இவர்களின் திருமண வீடியோ கவரேஜை உலகளவில் பிரபலமான OTT நிறுவனம் Netflix நிறுவனத்திடம் ரூ.25 கோடிக்கும் ஒப்பந்தம் செய்ததாக சொல்லப்பட்டது.

மேலும் தற்போது Netflix நிறுவனம் நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி Netflix நிறுவனம் திருமண புகைப்படங்களை சமுக வலைதளத்தில் பகிர்ந்ததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்களாம்.

Leave A Reply

Your email address will not be published.