இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து அப்ரிடி விலகல்.

பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக அப்துல்லா ஷபீக் தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கை அணிக்கு எதிராக 341 ரன்கள் சேசிங் செய்ததன் மூலம் பாகிஸ்தான் அணி அதிக ரன்கள் சேசிங் செய்த பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்னர் இதே அணிக்கு எதிராக 382 ரன்கள் பாகிஸ்தான் அணி சேசிங் செய்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று 24-ந் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அப்ரிடி காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஹாரிஸ் ரவுஃப் களமிறங்குகிறார். இது அவருக்கு முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷனாவும் காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்க மாட்டார் என்பதை இலங்கை கிரிக்கெட் போர்ட் தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.