டி20 போட்டி- வங்கதேச கேப்டனாக நூருல் ஹசன் நியமனம்.

மஹ்முதுல்லா கடைசியாக மேற்கிந்திய தீவுகளில் நடந்த டி20 தொடரில் வங்கதேச அணிக்கு கேப்டனாக இருந்தார்.

முஷ்பிகுர் ரஹீம் டி20 தொடரில் இடம்பெறவில்லை

வங்காள தேசம் அணி 3டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இதற்கான வங்காள தேசம் அணி அறிவிக்கப்பட்டது.

டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட மஹ்முதுல்லாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியின் கேப்டனாக நூருல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். மஹ்முதுல்லாவின் கேப்டன்ஷிப் நிர்வாகத்துக்கு திருப்திகரமாக இல்லாததால் நூருல் ஹசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மஹ்முதுல்லா கடைசியாக மேற்கிந்திய தீவுகளில் நடந்த டி20 தொடரில் வங்கதேச அணிக்கு கேப்டனாக இருந்தார். முஷ்பிகுர் ரஹீம் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இடம்பெறவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் எபடோட் ஹொசைன் தனது இடத்தை தக்கவைக்க தவறிவிட்டார். ஷாகிப் அல் ஹசன் இந்த தொடரில் இடம் பெறவில்லை. அவர் ஆசிய கோப்பைக்கு திரும்புவார் என்று தெரிகிறது.

டி20 அணி:-

முனிம் ஷஹ்ரியார், அனாமுல் ஹக் பிஜோய், லிட்டன் தாஸ், அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன் சோஹன் (கேப்டன்), மஹேதி ஹசன், நாசும் அகமது, தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், மொசாதெக் ஹொசைன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மெஹெதி ஹசன் மிராஸ், பர்வேஸ் ஹொசைன் எமன்

ஒருநாள் அணி:-

தமீம் இக்பால் (கேப்டன்), அனாமுல் ஹக் பிஜோய், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா ரியாத், அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன் சோஹன், நஸூம் அகமது, தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், மொசாடெக் ஹொசைன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மெஹெடி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம்.

Leave A Reply

Your email address will not be published.