ஐக்கிய மக்கள் சக்திக்கு 8 அமைச்சுக்கள்.

எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள அனைத்துக் கட்சி உள்ளடங்கிய அரசில் இணையுமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த 8 எம்.பி.க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்க அரசு முன்மொழிந்துள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

அடுத்த 15 நாட்களில் சர்வகட்சி அரசு அமைக்கப்படும் வரை தற்போதைய அமைச்சரவை இடைக்கால அமைச்சரவையாகச் செயற்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து 18 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை பதவியேற்றது.

இந்த அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேறிய இருவர் அமைச்சுப் பதவிகளை ஏற்றுள்ளனர். இந்தநிலையில் ஏனைய ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பில் உள்ள கட்சிகள், குழுக்களுக்கு அமைச்சுப் பதவி வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதன்படி அவற்றுடன் இன்று முதல் பேச்சு ஆரம்பமாகியுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் சிலர் கட்சியிலிருந்து வெளியேறி அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவியை ஏற்கும் நோக்குடன் இரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.