பள்ளி மாணவர்களுக்கான இலவச சிற்றுண்டி.. என்ன உணவுகள் வழங்கப்படவுள்ளன

அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டு வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் மாணவ, மாணவிகளுக்கு எவ்வகையான உணவு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 110 விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்த நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் பல்வேறு விதமான சிற்றுண்டி வகைகளில் ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டுள்ள நாட்களில் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,

திங்கட்கிழமை – உப்புமா வகை

ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

சேமியா உப்புமா + காய்கறி சாம்பார்

அரிசு உப்புமா + காய்கறி சாம்பார்

கோதுமைரவா உப்புமா + காய்கறி சாம்பார்

 

செவ்வாய்கிழமை – கிச்சடி வகை

ரவா காய்கறி கிச்சடி

சேமியா காய்கறி கிச்சடி

சோள காய்கறி கிச்சடி

கோதுமை ரவாகாய்கறி கிச்சடி

புதன்கிழமை – பொங்கல் வகை

ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்

வெண்பொங்கல் + காய்கறி சாம்பார்

வியாழக்கிழமை – உப்புமா வகை

சேமியா உப்புமா + காய்கறி சாம்பார்

அரிசி+ உப்புமா + காய்கறி சாம்பார்

ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

வெள்ளிக்கிழமை – கிச்சடியுடன் இனிப்பு

எதாவது ஒரு கிச்சடி வகையுடன் (செவ்வாய்கிழமை உணவு வகையின்படி)

ரவா கேசரி

சேமியா கேசரி

மேலும் வாரத்தில் 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறு தானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் தரம் FSSAI நெறிமுறைகளுக்கு உகந்தவாறு இருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.