இவர்கள் போராளிகள் அல்ல அராஜகவாதிகள் : விமல் வீரவன்ச

இப்போது காணக்கூடியவர்களாக இருப்பது போராளிகள் அல்ல அராஜகவாதிகள் என பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசை கவிழ்க்க சதி நடப்பதாகவும், அதனை அனுமதிக்க முடியாது எனவும் கூறிய வீரவன்ச, ரணிலிடம் அமைச்சு பதவியை எதிர்பார்க்கவில்லை எனவும், “எனக்கு எனது ராஜ்யம் வேண்டும். எனது ராஜ்யம் இருந்தால்தான் என்னால் வாழ முடியும் “ என உணர்ச்சியாக கொதித்தெழுந்தார்.

லட்சக்கணக்கான மக்களின் நியாயமான தூண்டுதலுக்கு மதிப்பளிக்காமல், அரசை சிதைப்பதற்காக மக்கள் அழுத்தத்தை தவறாக பயன்படுத்துகின்றனர் என்றும் , அரகலயவின் பின்னால் இருப்பது தமிழ் அமைப்புகள் என வீரவன்ச குற்றச்சாட்டினார்.

எவ்வாறான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இக்கட்டான தருணத்தில் அரசை கவிழ்க்கும் சதியில் இருந்து அரசை காப்பாற்ற வேண்டும் என்றார் அவர்.

கோட்டா வீட்டுக்குப் போ என்று சொன்னதும் அவர் போனார். இப்போதும் இந்த நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இடமளிக்க மாட்டார்களா என வீரவன்ச கேள்வி எழுப்பினார்.

அரச சொத்துக்களை கையகப்படுத்துவது அமைதியானதா என கேள்வி எழுப்பிய வீரவன்ச, இலங்கை இராணுவத்தின் அமைதியான போக்கை பார்த்து , கோழைத்தனமாக நினைக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.