சூழ்ச்சி மூலமே ராஜபக்சக்கள் விரட்டியடிப்பு.

சூழ்ச்சி மூலமே ராஜபக்சக்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர் என்று தெரிவித்த ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி., அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியே வெற்றி பெறும் என்றும் அடித்துக் கூறினார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கோட்டாபய ராஜபக்ச இலங்கையர். அவர் நிச்சயம் நாடு திரும்புவார். சூழ்ச்சி மூலமே எமது தலைவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த உண்மையை மக்கள் புரிய ஆரம்பித்துள்ளனர் .எதிர்காலத்தில் ஆதாரங்களுடன் அவை நிரூபணமாகும்.

அடுத்த தேர்தலிலும் எமது கட்சிக்கே பெரும்பான்மை பலம் கிடைக்கும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.