பாராளுமன்றத்தை முற்றுகையிட மக்களை அழைத்தது JVPயினர் : பெத்தும் கர்னர்

கடந்த 13ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் போராட்டத்தை தான் ஆரம்பிக்கவில்லை எனவும் , பாராளுமன்றத்தை முற்றுகையிட மக்களை அழைத்தவர்கள் , ஜனதா விமுக்தி பெரமுனாவால் ஆரம்பித்ததாக நேற்று கைதான சமூக ஆர்வலர் பெத்தும் கர்னர் தெரிவித்துள்ளார்.

JVPயை சேர்ந்த பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, லால்காந்த ஆகியோர் அந்த இடத்திற்கு மக்களை வரவழைத்ததாகவும், அங்கு வந்தவர்களின் உதவியுடனேயே தான் அந்த இடத்திற்கு சென்றதாகவும் அவர் கூறினார்.

சம்பவம் தொடர்பிலான வாக்குமூலத்தைப் பெறுவதற்காக குற்றப் பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அதற்குத் தயாராக வேண்டியதன் காரணமாகவும், சுகவீனம் காரணமாகவும் சில நாட்கள் தாமதமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு வந்திருந்த போதே அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

அதன்பின் அவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு சென்ற போது , குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.