இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்- வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.

இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கான டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் அணியில் ஹெட்மயர் மீண்டும் இணைகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விவரம்: பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஷமார் ப்ரூக்ஸ், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மயர், டேவன் தாமஸ், ரோவ்மேன் பாவல், ஒடியன் ஸ்மித், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், கீமோ பால், டொமினிக் டிரேக்ஸ், அல்சாரி ஜோசப், ஒபெட் மெக்காய், அக்கேல் ஹொசைன், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர்.

Leave A Reply

Your email address will not be published.