களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டுள்ளார் (வீடியோ)

களனிப் பல்கலைக்கழகத்தின் மாணவர் செயற்பாட்டாளர் ஒருவர் கடத்தப்பட்டு, சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் நெடுஞ்சாலையில் விட்டுச் செல்லப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

கடத்தப்பட்டவர் அந்தப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர் என்று சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த மாணவனை வெள்ளை வேன் மூலம் கடத்திச் சென்று மூன்று மணிநேரம் விசாரணை செய்த பின் வீதியில் விட்டுச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ஏனைய மாணவர் செயற்பாட்டாளர்கள் தொடர்பிலும் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், அந்த வேனில் வந்தவர்கள் அவரை போதைப்பொருளை காட்டியதோடு , மிரட்டி, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் எதிர்கால செயல் திட்டம் என்ன என்று கேட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று மதியம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.