பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி பிடல் ராமோஸ் காலமானார்.

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி பிடல் வால்டெஸ் ராமோஸ் 94, உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

தென்கிழக்காசிய நாடான பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ராமோஸ் கடந்த சில ஆண்டுகளாக இதய நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் காலமானார்.

கொரிய மற்றும் வியட்நாம் போர்களில் திறம்பட செயலாற்றியதோடு 1986ல் ஜனநாயக வழியில் போராடி பிலிப்பைன்ஸின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தவர் ராமோஸ்.

Leave A Reply

Your email address will not be published.