பிரித்தானியாவில் இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் சிலை உடைத்தெறியப்பட்டது

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஸ் புளொய்ட் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து உலகளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் கறுப்பின மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும், பிரித்தானியாவின் பிரிஸ்டோல் நகரில் இனவெறிக்கு எதிராக ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கறுப்பின மக்களை அடிமைப்படுத்தி வர்த்தகம் செய்த எட்வர்ட் கோல்ஸ்டனின் 18 அடி உயர வெண்கலச் சிலையை அடித்து நொறுக்கித் துறைமுகத்தில் உள்ள ஆற்றில் வீசினர்.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கண்டனம் தெரிவித்துள்ளதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.