சுகாதார வழிமுறைகளை பின்பற்றத் தவறினால் பஸ்களின் அனுமதி ரத்து

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பஸ்களின் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கி பஸ் போக்குவரத்தை முன்னெடுப்பது கட்டாயமானது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களை சுற்றிவளைப்பதற்கு நாடளாவிய ரீதியில் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பயணிகள் போக்குவரத்திற்கு தேவையான பஸ்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில், காத்திருப்புப் பட்டியலில் உள்ள பஸ்களையும் போக்குவரத்தில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

காத்திருப்புப் பட்டியலில் காணப்பட்ட 3,500 பஸ்கள் தற்போது இதற்காக பதிவு செய்துள்ளன.

இவற்றிற்கான போக்குவரத்து அனுமதியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பயணிகளின் தேவை கருதி நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Comments are closed.