நாடு திரும்புகின்றார் கோட்டா.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ஆம் திகதி நாடு திரும்புவார் எனத் தெரியவருகின்றது.

சிங்கள இலத்திரனியல் ஊடகம் ஒன்று இந்தத் தகவலை இன்று வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி பதவியை வகித்த கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் எழுச்சி வெடித்தது. கடந்த ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்டது.

இதையடுத்து ஜூலை 13 ஆம் திகதி நாட்டிலிருந்து ஜனாதிபதி வெளியேறினார். மாலைதீவு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் புறப்பட்டார். ஜூலை 14 ஆம் திகதி இராஜிநாமாக் கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார்.

இந்நிலையிலேயே அவர் எதிர்வரும் 11ஆம் திகதி நாடு திரும்புகின்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பினால் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்குத் தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை அரசு செய்துகொடுக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.