அடுத்த வாரம் முதல் வடக்கின் அனைத்து பாடசாலைகளும் வாரத்தில் 5 நாட்களும் ..

இம்மாதம் 8ஆம் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு வடக்கிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் செயல்படும் என வடமாகாண கல்விச் செயலாளர் அறிவித்துள்ளார்.

போக்குவரத்து வசதிகள் மிகவும் மோசமாக உள்ள மாகாணங்களில் பாடசாலைகளை ஸ்தாபித்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பில் அதிபர்கள் மற்றும் பிராந்திய கல்விப் பணிப்பாளர்கள் கூடி கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டுமென அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் எரிபொருள் தேவைப்படும் ஆசிரியர்களுக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து காலை 6 மணி முதல் 8 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுக்கு வடமாகாண கல்விச் செயலாளர் அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.