ஜோசப் ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசிய ரணில் ….பிணை கிடைக்குமா?

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

காலி முகத்திடல் போராட்டத்தில் பலமாக செயற்பட்ட ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அவரது கைது சட்ட விடயத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல், போராட்ட சட்டத்தை மீறியவர்களை வேறுபடுத்துவதில் சிக்கல் இருப்பதாக ஸ்டாலினிடம் கூறியதாக நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஸ்டாலினுடன் தொலைபேசி வழி கலந்துரையாடிய ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.

போராட்டத்தில் நல்லது கெட்டது இரண்டும் உண்டு என்றும் அந்த போராட்டத்தின் நல்ல பக்கம் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் அங்கு கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜோசப் ஸ்டாலினுக்கு நாளை (திங்கட்கிழமை) பிணை கிடைக்கும் என ஜனாதிபதி விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சூசகமாக தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனை மேற்கோள்காட்டி டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.