திமுகவிலிருந்து பாஜகவில் இணைந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர்

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் லியோ சுந்தரம் பாஜகவில் இன்று இணைந்துள்ளார். இதையடுத்து சென்னை மாநகராட்சியில் பாஜக உறுப்பினர்களின் பலம் 2 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் தேர்தலுக்கு பாஜக தனித்துப் போட்டியிட்டது.

இதில் 134-வது வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றார். உமா ஆனந்தன் 134-வது வார்டில் 5539 வாக்குகளை பெற்றிருந்தார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நின்ற அவர் 2036 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து முதன்முறையாக சென்னை மாநகராட்சிக்குள் பாஜக அடியெடுத்து வைத்தது. சென்னை மாநகராட்சி தேர்தலில் மற்ற இடங்களில் பாஜக தோல்வியடைந்தாலும், பல இடங்களில் 2 ஆம் இடத்தை பிடித்தனர்.

இந்நிலையில் 198வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லியோ சுந்தரம் பாஜகவில் இன்று இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்த அவர் மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்,தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

லியோ சுந்தரத்தின் வரவைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் பாஜக உறுப்பினர்களின் பலம் 2 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.