தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவராக அர்ஜுன ரணதுங்க.

தேசிய விளையாட்டு பேரவையின் புதிய தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த நியமனம் இன்று (10) விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து உத்தியோகப்பூர்வாக வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரான அர்ஜுன ரணதுங்க, இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்காலக் குழுத் தலைவராக முன்னர் பணியாற்றியவர், எனினும், விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் பதவிக்கு அவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதனிடையே, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்ன ஆகியோர் புதிய விளையாட்டுப் பேரவையில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளளார்கள்.

இதற்கு மேலதிகமாக முன்னாள் தேசிய மெய்வல்லுனர் பயிற்சியாளர் சுனில் ஜயவீர மற்றும் முன்னாள் நட்சத்திர மெய்வல்லுனர் வீராங்கனை ஸ்ரீயானி குலவன்ச ஆகியோரும் புதிய விளையாட்டுப் பேரவையில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

15 புதிய உறுப்பினர்களுடன் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய விளையாட்டுப் பேரவை விளளையாட்டுத்துறை அமைச்சருக்கு தீர்மானங்களை எடுப்பதற்கும், புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் ஆலோசனை வழங்குகின்ற ஒரு அமைப்பாக இந்த பேரவை செயல்படவுள்ளது.

முன்னதாக இலங்கை கிரி;க்கெட் அணியின் மற்றுமொரு நட்சத்திர முன்னாள் வீரரான மஹேல ஜயவர்தன தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக கடமையாற்றியிருந்ததுடன், முன்னாள் வீரர்களான குமார் சங்கக்காரவும் அதன் உறுப்பினர்களில் ஒருவராக இடம்பெற்றார்.

எனினும், நாட்டில் ஏற்பட்ட அரசியல் முறுகல் நிலை காரணமாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ கடந்த ஏப்ரல் மாதம்2 2ஆம் திகதி பதவியை இராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து மஹேல ஜயவர்தனவின் தலைமையிலான தேசிய விளையாட்டுப் பேரவையும் இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.