சீன உளவு கப்பல் 16ம் தேதி இலங்கைக்கு?

சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற உளவு கப்பலுக்கு எதிர்வரும் 16ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் நுழைவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கப்பல் தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பல் 29 நாட்களாக எந்த துறைமுகத்திலும் நிற்காமல் பயணித்து வருவதாகவும், இதனால் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து தேவையான எரிபொருள் மற்றும் அங்குள்ள கடற்படையினருக்கு உணவுகளை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் சீனா தெரிவித்திருந்தது.

இந்த கப்பலுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைவதற்கு நேற்று (11) அரசாங்கத்திடம் அனுமதி கிடைத்திருந்த போதிலும், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்த்த எதிர்ப்பின் காரணமாக பயணத்தை தாமதப்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இக்கப்பலுக்கு எதிர்வரும் 16ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.