மூவர்ண கொடியை போர்த்தி கொண்ட காளகஸ்தி கோவில் கோபுரம்

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள முன்னணி சிவாலயம் ஸ்ரீ காலஹஸ்தி கோயில். ராகு,கேது தோஷ பரிகாரங்களுக்கு புகழ்பெற்ற ஸ்தலமாக விளங்கும் காளஹஸ்தி. இந்த கோவில் உள்ள கோபுரம் ஒன்றிற்கு மூவர்ண கொடி போர்த்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது தவிர அந்த கோபுரத்தின் மேல் 3 மூவர்ணக் கொடிகள் பட்டொளி வீசி பறக்கின்றன.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை சுதந்திர தின அமுதப் பெருவிழா என்று மத்திய அரசு கொண்டாடிவருகிறது.இந்த நிலையில் நாட்டின் குடிமக்கள் அனைவரும் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தங்கள் வீடுகளில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாட்டில் பல்வேறு பாகங்களிலும் வீடுகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள்,கோவில்கள் ஆகிய அனைத்திலும் இன்று காலை தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதன் ஒரு பகுதியாக காளஹஸ்தி கோவில் கோபுரத்தின் மீதும் மூன்று தேசிய கொடிகளை ஏற்றிய கோவில் நிர்வாகம் கோபுரத்தின் மீது மூவர்ண கொடியை போர்த்தி அலங்கரித்துள்ளது.

இந்த நிலையில் மூவர்ண கொடியை இதுபோல் பயன்படுத்தலாமா என்ற கேள்வியும் இந்த செயல் ஆகம விதி மீறல் என்ற குற்றச்சாட்டுகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இது குறித்து கோயில் அறங்காவல் குழு தலைவர் கூறுகையில், நாட்டின் மக்கள் அனைவரும் எந்தவித பேதமும் இன்றி கொண்டாடும் ஒருகிணைந்து கொண்டாடும் ஒரே விழா சுதந்திர தின விழா. எனவே, காளஹஸ்தி கோயிலும் 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடுகிறது என்றார்.

75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 15ம் தேதிவரை அனைவரும் தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து பல்வேறு பிரபலங்கள் தங்கள் சமூக வலைத்தளங்களின் டிபியை தேசிய கொடியாக மாற்றி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.