6 தமிழ் அமைப்புகளுக்கும் – அதன் 316 பேருக்கும் அரசிடம் இருந்து விடுதலை.

இலங்கையில் 06 சர்வதேச தமிழ் அமைப்புகளுக்கும் 316 பேருக்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு, திராவிட ஈழ மக்கள் பேரவை, கனடியத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை என்பன தடையை நீக்கிய சர்வதேச தமிழ் அமைப்புகளாகும்.

மேலும், இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக 15 அமைப்புகளும் 316 நபர்களும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் 03 அமைப்புக்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, தாருல் அதர் aka Jamiul Adar, பள்ளிவாசல் aka Dharul Adar Quran Madrasa aka Darul Adar, Sri Lanka Islamic Students Association aka Jamia மற்றும் Save the Pearls aka Save the Pearl Society ஆகியவை அச்சுறுத்தல்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.