ஹாட்லி மைந்தர்களின் வருடாந்த ஒன்றுகூடல்!

யாழ்., வடமராட்சி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 28ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

காலை 8 மணிக்கு பழைய மாணவர்கள் அணிகளுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டியுடன் நிகழ்வு ஆரம்பமாகும்.

மாலை 6 மணிக்குப் பழைய மாணவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நடைபெற்று இரவு 8 மணிக்கு இரவு போசனத்துடன் நிகழ்வு நிறைவடையும்.

வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வில் ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு பழைய மாணவர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.