இந்த வார இறுதிக்குள் அவசரகாலச் சட்டத்தை நீக்க முடியும்! – ஜனாதிபதி நம்பிக்கை தெரிவிப்பு.

“இலங்கையில் தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை இந்த வார இறுதிக்குள் நீக்க முடியும்.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டார்.

நாடு தற்போது ஸ்திரமான நிலையில் இருக்கின்றது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பு, சினமன் லேக்சைட் ஹோட்டலில் இன்று (16) நடைபெற்ற ‘தொழில்சார் வல்லுநர் சங்கங்களின் மாநாடு – 2022’ விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

“தற்போது நாட்டைக் கட்டியெழுப்ப பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை” – என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, தொழில்சார் வல்லுநர் சங்கங்கள் சம்மேளத்தின் தலைவர் துலித பெரேரா, தலைமைச் செயலாளர் உபாலி ஜயவர்தன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.