யாழ். மாவட்ட செயலருடன் ஐ.நா. பிரதிநிதிகள் சந்திப்பு.

ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பெங்கொக் அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன் – கார் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார்.

இன்று காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் க.மகேசனை டேவிட் மஸ்னெக்யன் கார் சந்தித்தார். இதன்போது இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரும் உடனிருந்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரம் மற்றும் கடற்றொழிலுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து யாழ். மாவட்ட செயலரிடம் கேட்டறிந்தேன் என்று டேவிட் மஸ்னெக்யன் – கார் தெரிவித்தார்.

கடந்த 16 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பெங்கொக் அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன் – கார், பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.