கல்ப் ஜயண்ட்ஸ் அணியில் விளையாடவுள்ள லின், ஜோர்டன், ஹெட்மையர்!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள இண்டெர்நெசனல் லீக் T20 (ILT20) தொடரின், கல்ப் ஜயண்ட்ஸ் அணிக்காக அவுஸ்திரேலியாவின் கிரிஸ் லின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் ஜனவரி மாதத்தில் பிக் பேஷ் லீக் நடைபெறவுள்ள நிலையில், கிரிஸ் லின்னை தவிர்த்து அவுஸ்திரேலிய வீரர்கள் எவரும் ILT20 தொடரில் இணைக்கப்படவில்லை.

கிரிஸ் லின் பிரிஸ்பன் ஹீட் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், எந்தவொரு அணிகளும் அவரை இணைப்பதற்கு முன்வரவில்லை. எனவே, கல்ப் ஜயண்ட்ஸ் அணி அவரை இணைத்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதேநேரம் ILT20 தொடரில் ஒரு அணி 14 வெளிநாட்டு வீரர்களை அணியில் இணைக்க முடியும் என்ற அறிவித்தலை விடுத்துள்ள நிலையில் ஷிம்ரொன் ஹெட்மையர், கிரிஸ் ஜோர்டன், டேவிட் வைஸ், ஒல்லி போப் மற்றும் குவைஸ் அஹ்மட் ஆகிய முன்னணி வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

கல்ப் ஜயண்ட்ஸ் அணியின் 14 வெளிநாட்டு வீரர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், அணியின் பயிற்றுவிப்பாளராக ஜிம்பாப்வேயின் எண்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார். கல்ப் ஜயண்ட்ஸ் அணிக்கு முன்னர், எம்.ஐ எமிரேட்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் தங்களுடைய வெளிநாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்ப் ஜயண்ட்ஸ் அணியின் வெளிநாட்டு வீரர்கள் பட்டியல்

ஷிம்ரொன் ஹெட்மையர், கிரிஸ் ஜோர்டன், கிரிஸ் லின், டொம் பெண்டன், டொமினி்க் டார்க்ஸ், டேவிட் வைஸ், ஜெமி ஓவர்டன், ரிச்சர்ட் கிலீசன், ரெஹான் அஹ்மட், வயன் மெட்சன், லியம் டவ்சன், ஒல்லி போப், ஜேம்ஸ் வின்ஸ், குவைஸ் அஹ்மட்.

Leave A Reply

Your email address will not be published.