சீன உளவு கப்பல் அம்பாந்தோட்டையில் இருந்த நாட்களில் செயற்கைக்கோள்களிடையே கடும் யுத்தம்!

அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த சீன உயர் தொழில்நுட்ப கப்பல் யுவான் வாங் 5 நேற்று (22) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.

யுவான் வாங் 5 கப்பல் இலங்கைக்கு வந்த பின்னர், கப்பலின் செயல்திறனை மூன்று இந்திய செயற்கைக்கோள்கள் மூலம் விரிவாகக் கண்காணித்து வந்ததாகவும், அந்த செயற்கைக்கோள்களால் கப்பலின் செயற்கைக்கோள் கண்காணிப்பு சிக்னல் அமைப்பில் இடையூறு ஏற்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. .

அதன்படி, இந்தியாவின் சுற்றுவட்டப்பாதையில் உள்ள ஜிசாட்-7, எமிசாட் மற்றும் ரிசாட் செயற்கைகோள்களால் கப்பல் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

யுவான் வாங் 5 கப்பல் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் பிரவேசித்த காலம் முதல் அதன் செயற்பாடுகள் தொடர்புடைய செய்மதிகள் மூலம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.