பட்ஜெட் வாக்கெடுப்புக்கு முன்னதாக இராஜாங்க அமைச்சர்கள் நியமிப்பு!

இன்று நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு முன்னர் இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவிகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படாவிட்டால் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டோம் என மொட்டு உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கொடுத்த அழுத்தமே இதற்குக் காரணம் என அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

முன்னர் ஜனாதிபதியை சந்தித்த மொட்டுவில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் சிலர், தங்களுக்கு மீண்டும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தனர்.

அதன்படி இன்று நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாக இந்த இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.