தொடரும் துப்பாக்கிச்சூட்டுக் கொலைகள்: பின்னணி தொடர்பில் பொலிஸ் விளக்கம்.

இலங்கையில் கடந்த சில மாதங்களாகத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதன்பின்னணி தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிட்டுள்ளார்.

“கடந்த மே 31 ஆம் திகதி தொடக்கம் நாட்டின் பல பகுதிகளில் பதிவாகும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள், வெளிநாடுகளில் இருந்து நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் தரப்பினரால் வழிநடத்தப்படுகின்றன என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த மே 31ஆம் தொடக்கம் நேற்று (செப்டெம்பர் 01) வரை 30 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாவர்” – என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.