கோட்டாவை நிம்மதியாக ஓய்வெடுக்க விடுங்கள்!

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது பொருத்தமானதல்ல. அவரை நிம்மதியாக ஓய்வெடுக்க விடுங்கள்.”

இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் மீண்டுமொரு கொந்தளிப்பு நிலையை ஏற்படுத்த எவரும் முன்வரக்கூடாது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை மீண்டும் அரசியலுக்குள் கொண்டுவந்து குளிர்காய சிலர் முனைகின்றனர். இதற்குக் கோட்டாபய இடமளிக்கக்கூடாது.

கடும் மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவது நல்லதல்ல. அவரை நிம்மதியாக ஓய்வெடுக்க விடுங்கள்.

அவரைச் சுற்றி நிற்கும் அவரின் சகாக்கள் நாட்டினதும் மக்களினதும் மன நிலையை முதலில் அறிய வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.