எனக்குப் பிறகு இவர்தான் ராணி!” – ராணி எலிசபெத் முன்மொழிந்த நபர் யார்?

தன் தந்தை நான்காம் அரசர் கிங் ஜார்ஜின் மறைவுக்குப் பிறகு, தனது 25-ம் வயதில் 1952-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தை ஆண்டு வருகிறார். தான் பதவியேற்ற தினமான பிப்ரவரி 6-ம் திகதியன்று, தன் தந்தை இறந்த அதே சந்திகிராமத்தில் தனது 70 வருட ஆண்டு விழாவைக் கொண்டாடினார்.

இங்கிலாந்தை 70 ஆண்டுகள் ஆண்டதற்காக 95 வயதாகும் இரண்டாம் எலிசபெத் ராணிக்கு விழா கொண்டாடப்பட்டது.

அவரின் குடும்பம், உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பெண்கள் பணியாற்றும் நிறுவனங்கள் ஆகியவை இணைந்து இந்த நிகழ்வைக் கொண்டாடின.

நிகழ்ச்சியில் பேசிய எலிசபெத் தனக்குப் பிறகு நாட்டை ஆள்வது யார் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர் எதிர்காலத்தில் அரியணையில் யார் அமரப் போகிறார் என்பதை மேற்கோள் காட்டிப் பேசினார். அப்போது,

இது என் தாழ்மையான வேண்டுகோள், நேரம் வரும்போது, என் மகன் சார்லஸ் அரசராகப் பதவி ஏற்பார். அவரின் அருகில் என் மருமகள் கமிலா ராணியாக அமர்வார். எனக்குத் தந்த ஆதரவை அவர்களுக்கும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

மேலும் நாட்டு மக்களுக்கு எலிசபெத் ராணி எழுதிய கடிதத்தில்,

நீங்கள் எனக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி மொழிகிறேன். நீங்கள் காட்டிய அன்பிற்கும், விசுவாசத்திற்கும் என் இறுதி வரை நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். எனக்குத் தந்த ஆதரவை என் மகனுக்கும், மருமகள் கமீலாவுக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.