ஆசிய கோப்பையை வெல்லப் போவது யார்? – பாகிஸ்தான், இலங்கை அணிகள் இன்று மோதல்.

ஆசிய கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான், பகர் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளார். பந்து வீச்சில் நசீம்ஷா, ஹரிஸ்ரவுப், ஷதப்கான் ஆகியோர் உள்ளனர். ஆல்- ரவுண்டர் முகமது நவாஸ் பேட்டிங், பந்து வீச்சில் அசத்தி வருகிறார். நேற்று முன்தினம் நடந்த சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இலங்கையிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.

இதற்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது தகன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. அதன்பின் அந்த அணி எழுச்சி பெற்று இறுதிப் போட்டியில் தகுதி பெற்றுள்ளது. இலங்கை அணி பேட்டிங்கில் நிசாங்கா, குசால் மெண்டிஸ், பானுகா ராஜபக்ச ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

பந்து வீச்சில் ஹசரங்கா, தீக்‌ஷனா, பிரமோத் மதுஷன் ஆகியோர் உள்ளனர். ஆல்- ரவுண்டர் கருணரத்னே கடைசி ஆட்டத்தில் அதிரடியாக விளையாட கூடியவர். வெற்றி உத்வேகத்தை இறுதிப் போட்டியிலும் தொடர இலங்கை முயற்சிக்கும். இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பையை இலங்கை அணி 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.