பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயத்துக்குச் சென்று மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ரணில்!

கொழும்பில் உள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயத்துக்கு இன்று முற்பகல் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

உயர்ஸ்தானிகராலயத்துக்கு வருகை தந்த ஜனாதிபதியை இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் வரவேற்றார்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நினைவுப் புத்தகத்தில் அனுதாபக் குறிப்பை எழுதிய ஜனாதிபதி, ஏழு தசாப்தங்களாக இரண்டாம் எலிசபெத் மகாராணி, உலக மக்களுக்கு ஆற்றிய அளப்பரிய சேவையை நினைவுபடுத்தினார்.

இதேவேளை, எதிர்வரும் 19ஆம் திகதி இலண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் எலிசபெத் மகாராணியின் இறுதி ஊர்வலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.