ஆசிய சம்பியனாகியது இலங்கை…!

ஆசிய வலைப்பந்து மகளிர் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இலங்கை 63 – 53 புள்ளிகள் வித்தியாசத்தில் சிங்கப்பூரை தோற்கடித்தது.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 63க்கு 53 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கை வீரர்கள் வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது​.

இலங்கை அணியின் வெற்றிக்கு இலங்கையிலுள்ள சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி வெல்வது இது 6வது முறையாகும என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.