ஜெனிவாவில், இலங்கை பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தியதற்கு குறித்து வருத்தம்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் செயற்குழு ஆணையாளர் நடா அல் நஷீப் இன்று (12) இலங்கை தொடர்பான அறிக்கையை சபையின் ஆரம்ப அமர்வில் சமர்ப்பித்துள்ளார்.

அந்த அறிக்கையில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தை உருவாக்குவதற்குத் தேவையான கலந்துரையாடலை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு புதிய அரசாங்கத்திற்குத் தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக ஆகஸ்ட் 18 அன்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மூன்று மாணவர் செயற்பாட்டாளர் தலைவர்களைக் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டது வருத்தமளிக்கிறது என்று நடா அல் நஷீப் கூறினார்.

நிறுவன மாற்றங்கள், ஜனநாயகம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் சீர்திருத்தங்கள் முக்கியமானவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குற்றம் இழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதற்கு முக்கியத்துவமுள்ள நிறுவனங்களின் சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அவர் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.