பலப்பிட்டியவில் ரயில் மோதி ஒருவர் பலி.

பலப்பிட்டியில் இன்று ரயில் மோதி ஒருவர் பலியாகியுள்ளார்.

பலப்பிட்டிய – வெனமுல்ல பகுதியில் கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன் வான் மோதி இடம்பெற்ற விபத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

63 வயதான வானின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, காலி – மக்குளுவ பகுதியில் ரஜரட்ட ரெஜின ரயிலுடன் வான் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ரயிலுடன் மோதிய வான், மோட்டார் சைக்கிள் ஒன்றுடனும் மோதியுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளதுடன், அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.