பைஸர் தடுப்பூசி ஏற்றாவிட்டால் பிள்ளைகள் சாவார்கள்! – சிங்கள அதிகாரி மிரட்டல்.

பைஸர் தடுப்பூசிகளை ஏற்றாவிட்டால் மாணவர்கள் உயிரிழப்பார்கள் என்று பெற்றோரை அச்சுறுத்தியாவது தடுப்பூசிகளை ஏற்றுங்கள் என்று மருத்துவர்களுடனான கலந்துரையாடலின்போது சிங்கள அதிகாரி ஒருவர் மிரட்டியுள்ளார்.

இலங்கையிலேயே வடக்கு மாகாணத்தில்தான் 4ஆவது டோஸ் ஏற்றியவர்கள் குறைவாக உள்ளார்கள் என்று சிங்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 4ஆவது டோஸை – காலாவதியான பைஸரை, 0.8 சதவீதத்தினரே இதுவரை ஏற்றியுள்ளனர். இந்தத் தகவலை மறைத்து மேற்கண்டவாறு அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இதேவேளை, தடுப்பூசி தொடர்பான விடயங்களில் இதுவரை காலமும் எந்தவொரு கடிதங்களோ, அறிவுறுத்தல்களோ, சுற்றறிக்கைகளோ அனுப்பாத வடக்கு மாகாண பிரதம செயலர் சமன் பந்துலசேன, காலாவதியான தடுப்பூசி ஏற்றப்படாமல் இருப்பது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

காலாவதியான தடுப்பூசியை ஏற்ற முடியும் என்ற சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையையும் இணைத்து அவர் அந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.